டீச்சர் கிடைக்க கொடுத்து வைச்சு இருக்கனும் 2
ஐஸ்வர்யா மீது கோபத்தோடு புறப்பட்ட நான் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன். நேரத்தை பாக்க 6 மணி என காட்டியது. நான் உள்ளே செல்ல “நிரு, ரேவதி என்னவாம்?” என்று கிச்சனில் இருந்து அம்மாவின் குரல் கேக்க “அதொண்டும் இல்ல அம்மா, பார்ட் டைம் வேலை ஒண்டு இருக்காம். என்ன போக சொல்லி சொன்னாங்க” என்றேன். “படிக்கிற நேரத்தில வேலை எதுக்கு நீ படிச்சு முடி பிறகு நல்ல வேலை வரும். குடும்பத்த கவனிக்க உனக்கு …