திரும்ப திரும்ப சுழலும் பாகம் 1

இந்த கதை ஒரு ஃபேன்டஸி கதை.. அதனால் லாஜிக் என்பது இருக்காது.

இந்த கதையில் வரும் கதாபாத்திரம் எந்த ஒரு சாதியையும் அவர்களின் திருமண சம்பிரதாய முறைகளை கொச்சைபடுத்தி காட்டுவதற்காக எழுதபட்டவை அல்ல..

சென்னை விமான நிலையம்
இன்று காலை 9மணி ..

அவன் அவசரம் அவசரமாக காரை விட்டு இறங்கி வேகமாக ஓடி சென்னை விமான நிலையத்திற்குள் நுழைந்து போர்ட்டிங் பாஸ்க்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்தான்.. இவனை போலவே ஒரு பெண்ணும் அவனுக்கு பின்னால் வந்து நின்று வரிசை வேகமாக நகர்ந்து செல்கிறதா என பார்த்துக் கொண்டே இருந்தாள். இருவரும் தலையை மாறி மாறி திருப்பி வரிசையை பார்த்துக் கொண்டே இருந்தனர்..

அங்கே இருந்த ஸ்பிக்கரில் சென்னை – கோயம்புத்தூர் செல்லும் இன்டியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட இன்னும் சில நிமிடங்களே இருப்பதாக சொல்ல இங்கு இருவரும் காலில் வெந்நீர் ஊற்றி நின்றுக் கொண்டிருந்தனர்..

ஒரு வழியாக டிக்கெட் செக்கிங் எல்லாம் முடித்து தங்களுடைய பையை எடுத்துக் கொண்டு வேகமாக நடந்தனர்.. முதலில் அவன் தான் அந்த ப்ளைட்டில் ஏறி தன்னுடைய சீட்டை பார்த்து உட்கார்ந்து முகத்திற்கு முன்னால் இரு உள்ளங்கையும் தேய்த்து பெருமூச்சு விட்டு சரியான நேரத்திற்கு ப்ளைட்டில் ஏறியதால் தன்னை தானே ஆசுவாசபடுத்திக் கொண்டான்..

தன்னுடைய பையில் இருந்த ஹெட்போனை எடுத்து மாட்டிக் கொண்டு கண்ணை மூடி ரிலாக்ஸாக பாட்டு கேட்டுக் கொண்டே தன் வருங்கால மனைவியை பற்றி கனவு காண ஆரம்பித்தான். அவன் கண்ணை மூடியிருந்ததால் முன்னால் நடப்பது எதுவும் தெரியாது..

அவனுக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்த பெண் தன்னுடைய லக்கேஜ் தூக்க முடியாமல் தூக்கி கொண்டு தட்டு தடுமாறி அந்த ப்ளைட் படிகட்டில் ஏறி உள்ளே வந்து மீண்டும் தடுமாற அவன் மீது விழ அவளுடைய உதடும் இவனுடைய உதடும் ஒன்றோடு ஒன்று ஒட்டி உரச ஏற்கெனவே அவனுடைய வருங்கால மனைவி பற்றி கனவில் இருப்பதால் உடலினுள் உணர்ச்சிகள் ஏறியிருந்ததால்/

அவளின் உதட்டை தன் வருங்கால மனைவியின் உதட்டாக நினைத்து உறிஞ்ச ஆரம்பித்தான். அந்த பெண்ணோ அவனுடைய உறுஞ்சலிருந்து விடுபட முடியாமல் ‘ம்ம்ம்’ மட்டும் வாயினுள் முனங்க முடிந்தது. கடைசியில் அவளின் தலையை பிடித்து வலுக்கட்டாயமாக விலக்கி தன் உதட்டை பிடுங்க

இங்கு அவனுடைய மொபைலில் ‘யார் இந்த தேவதை யார் இந்த தேவதை’ சத்தமாக சிணுங்க கண்ணை விழித்து பார்த்தான். அப்போது தான் அவனுக்கு தான் இன்னும் கால் டாக்ஸில் தான் போய்க் கொண்டிருக்கிறோம் என உறைத்தது..

“அப்போ நா கண்டது கனவு தான ச்சே.. எதுக்கு இப்ப இந்த மாதிரி கனவுலாம் வருது” என தனக்குள் நொந்துக் கொண்டாலும் ஏதோ பெயர் தெரிந்த பெண்ணின் உதட்டை உறுஞ்சியது கனவாக இருந்தாலும் ஒரு கிளுகிளுப்பையும் அதே சமயம் அவனுக்கு ஒருவித எதிர்பாரா அச்சத்தையும் சேர்த்தே தந்தது. அவனுக்கு ஏற்பட்ட திடீர் பயத்தால் முகம் எல்லாம் வியர்த்து கொட்டியது. இன்னும் அவனுடைய மொபைல் விடாமல் அலறிக் கொண்டேயிருந்தது.

முன்னால் காரை ஓட்டிக் கொண்டிருந்த கால்டாக்ஸி டிரைவர்,

அவனிடம், “சார் உங்க மொபைல் அடிச்சிட்டே இருக்கு பாருங்க” சொல்ல சுதாரித்து மொபைலை பார்த்தான்.. அவன் அம்மா தான் கால் பண்ணியிருந்தார்.. உடனே அட்டன் செய்து

“ஹலோ அம்மா” என்றதும்

“டே கண்ணா என்னடா பண்ற.. ஒரு போன எடுக்க இவ்வளவு நேரமா? சரி கிளம்பிட்டியா என்ன?” அடுக்கடுக்கா கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்க

“அய்யோ அம்மா செத்த நிப்பாட்டு.. நா ஆபிஸ்ல லீவ் சொல்லிட்டு கிளம்பி இப்ப ஏர்போர்ட்டுக்கு தான் போய்ட்டு இருக்கேன்.”

“சரிடா ஏற்கெனவே உனக்கு நேரம் சரியில்ல ஜோசியர் வேற சொல்லியிருக்கிறார்.. அதனால நீ பாத்து பத்திரமா வந்து சேரு.. என்ன புரியுறதா?”

“சரிம்மா. அதலாம் நா பாத்து பத்திரமா வந்துடுவேன்.. நீ நொய் நொய்னு பேசமா போனை கொஞ்சம் வை” சொல்ல எதிர்முனையில் கால் கட் ஆனதும் அவனுடைய மொபைல் டிஸ்பிளேயில் அவனுடைய வருங்கால மனைவி தேன்மொழி சிகப்பு நிற கல் வைத்த சேலையை கட்டி அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள்.. அந்த அழகான பெண்ணை பார்த்துக் கொண்டிருக்கும் இவனை பற்றி சில வரிகள்..

இவனுடைய பெயர் வெங்கடேஷ் பிரசாத்.
கொஞ்சம் கூச்சம் சுபாவமுடையவன்.

மேலும் செய்திகள்  என் மனைவியின் உடன் வேலை செய்து வருகிறாள்

அப்பா வெங்கட்ராமன். அம்மா பூங்கோதை. அவனுக்கு வயது 27 ஆகி முதல் நாள் முடிந்து அடுத்த நாள் இன்று தான் ஆரம்பித்திருக்கிறது. ஆம். நேற்று தான் அவனுடைய 27வது பிறந்த நாளை கொண்டாடினான். அவன் படித்தது பி.டெக். இப்போது சென்னையில் ஒரு தனியார் சாப்வேர் கம்பெனியில் ப்ராஜெக்ட் மேனேஜராக இருக்கிறான்.. மற்றபடி அவன் அக்மார்க் நல்லவன்..

ஆனால் அவன் என்ன தான் நல்லவனாக இருந்தாலும் பிறக்கும் போதே அவனின் தலையில் சனி கால ரூபத்தில் ஏறி உட்கார்ந்துவிட்டான்.. அவன் சரியாக சூரிய கிரகணம் நடக்கும் வேளையில் பிறந்ததால் அவனுக்கு காலத்தை முன் கூட்டி கணித்து சொல்ல கூடிய ஆற்றல் உண்டு என்பதை அவனுக்கு ஜாதகம் எழுதும் போதே அவனின் குடும்ப ஜோசியர் சொல்லிவிட்டார். இதில் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது என குண்டை தூக்கி போட்டார்..

“அய்யோ என்ன ஜோசியர்வாள் இப்படி சொல்றேள்.. நல்லா பஞ்சாங்கத்த பாத்து சொல்லுங்க..” என்றனர் அவனை பெற்றவர்கள்

“நல்லா பாத்துட்டேன்.. நா சொன்னது சத்தியமான வாக்கு தான். சாட்சாத் அந்த ஆண்டவன் மேல ஆணையா இது தான் நடக்கும்..”

“அய்யோ ஆண்டவா.. ஏன் இப்படி?” அவனின் பெற்றோர்கள் புலம்ப அந்த ஜோசியர்..

“இந்தா பாருங்கோ.. காலத்த கணிக்கிறது இப்பவே நடக்காது.. அவனுக்கு 27வயது ஆகும் போது ஆரம்பித்து நடக்க ஆரம்பிக்கும்..”

“ஜோசியர்வாள் இது முடியவே முடியாதா?” அவனுடைய அப்பா கேட்க

“முடியுமா? முடியாதா? இப்பவே என்னால கணிச்சு சொல்ல முடியாது. அத கிரகண பலன், கால சாஸ்த்திரம் எல்லாம் பாத்து கணிச்சு சொல்றேன்.. இப்ப என்னால ஒன்னே ஒன்னு மட்டும் தெளிவா சொல்ல முடியும்.?” ஜோசியர் சொல்ல

“என்ன சொல்லுங்கோ?”

“உங்க பையனோட ஜாதகத்துக்கு கல்யாணம் பண்றச்சே அவன் எப்படி சூரிய கிரகணத்துல பிறந்தானோ அதே மாதிரி அவன் கட்டிக்கிற போற பொண்ணும் பிறந்திருக்கனும்.. உங்க பையனுக்கு 27வயசு ஆரம்பிச்சு முடியுறதுக்குள்ள இந்த மாதிரி பொண்ண கண்டுபிடிச்சு கட்டிவச்ச அவனோட வாழ்க்கை சுமுகமா இருப்ப வாய்ப்பு இருக்கு கால சாஸ்த்திரம் சொல்லுது..” என்றார் ஜோசியர்..

வெங்கட் பிறந்ததும் அந்த ஜோசியர் சொன்ன வார்த்தைகளை திரும்ப நினைத்து பார்த்தாள் பூங்கோதை. தன் மகனுக்கு எந்த பிரச்சினையும் வராமல்
நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என மனதார கால பைரவரை வேண்டிக் கொண்டாள்.

அங்கு அவன் அம்மா தன்னுடைய ஒரே மகன் பத்திரமாக வீடு வந்து சேர வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கிறாள். ஆனால் இவனோ இங்கு தன்னுடைய வருங்கால மனைவியின் ஃபோட்டாவை பார்த்து ஜொல்லு விட்டு கொண்டிக்கிறான்.. அதுவும் ஏர்போர்ட் வந்தது கூட தெரியாமல்,

இப்போதும் கூட கால்டாக்ஸி டிரைவர்

சார் ஏர்போர்ட் வந்திருச்சு… ஹாரன் அடிச்சு சொல்ல சுயநினைவுக்கு வந்து தன்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு அவனுக்கு குடுக்க வேண்டிய பணத்தை குடுத்துவிட்டு மீண்டும் மொபைல் டிஸ்ப்ளே பார்த்தபடியே ஏர்போர்ட் உள்ளே நடந்தான். உள்ளே சென்று டிக்கெட் எடுக்க வரிசையில் நின்றான்..

அந்த சமயம் பார்த்து மீண்டும் அவள் மொபைல் ரிங் ஆக இந்த முறையும் அவன் அம்மா தான் கால் பண்ணியிருக்கிறாள்.. அவன் சலிப்பாக காலை அட்டன் செய்ய,

“ஹலோ டே கண்ணா”

“என்னம்மா அதான் பத்திரமா வந்துடுவேன் சொன்னேனா இல்லியா திரும்ப திரும்ப ஏன் கால் பண்ற”

“அய்யோ ராமா நா அதுக்கு பண்ணலடா.”

“பின்ன வேற எதுக்காம் பண்ணின?”

“உன் அப்பா பிரண்டோட பொண்ணு சுபாவும் சென்னையில இருந்து வரளாம்.. அவளையும் சேத்து கூட்டிட்டு வர சொன்னார்டா. அத சொல்ல நோக்கு கால் பண்ணேன்.”

“அம்மா அவ யாரு நேக்கு எப்டி தெரியும்? நா பாத்து கூட இல்ல. பின்ன எப்படி கூப்பிட்டு வரது.”

“அவட்ட உன் நம்பரை குடுத்திருக்கேன்.. அவளே உள்ள வந்திட்டு கால் பண்ணுவடா கண்ணா. கொஞ்சம் பாத்து கூட்டிட்டு வாடா.. இல்லைனா உன் அப்பாட்ட என்னால் பேச்சு வாங்க முடியாதுடா..”

“சரி கால் பண்ணா கூப்பிட்டு வரேன்.” சொல்லிவிட்டு மொபைலை சைலண்டில் போட்டான்.. டிக்கெட் எடுக்கும் வரிசை நகர்ந்து கொண்டே போயிருந்தது. இவன் அதை கவனிக்காமல் கால் பேசிக் கொண்டே இருந்துவிட்டான்..

இவனுக்கு முன்னால் இருக்கும் இடைவெளியை பார்த்துவிட்டு அவனுக்கு பின்னால் ஒரு கை திடீரென தோள்பட்டை தட்ட சற்று பயந்து நடுங்கி திரும்பி ஒரு அழகான பெண் இவன் பயந்ததை பார்த்து ஹா..ஹா.. வாயில் கை வைத்து சிரித்தாள்.. இவனோ அந்த பெண் தான் பயந்ததை பார்த்து தான் சிரிக்கிறாள் என புரியாமல் இங்கிதம் கூட இல்லாமல் அவள் சிரிப்பதையே ஆ வென வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்..

மேலும் செய்திகள்  சூப்பர்டா ராம்! விட்ட என் கிழிச்சே இருப்பா!

ஆனால் அவன் எதனால் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என இவளுக்கு தெரியாது. மீண்டும் மீண்டும் தன் முளையை கசக்கி இவள் அவள் தானா யோசித்து பார்க்கிறான்..

“ஹாய். ஐயம் மித்ரா” என்றாள் பின்னால் இருந்த பெண்

இவனும் பதிலுக்கு “ஹாய்.” என்றான்

“கோயம்புத்தூர்க்கா.?” கேட்க

“ம்ம். எஸ்.”

“ஓ.. ஓகே.. இவ் யூ டோன்ட் மைண்ட்.. நானும் உங்ககூட சேந்து வரலாமா?” தயங்கி தயங்கி கேட்க அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு சரி என்றான்.

“வாவ் தாங்க்ஸ்.” சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்..

“பட் இந்த கியூ மட்டும் கொஞ்சம் பாஸ்ட்டா போனா நல்லா இருக்கும்ல” கேட்டுக் கொண்டே தலையை கொஞ்சம் வெளியை நீட்டி எட்டி பார்த்தாள்..

“ஆமா.. பட் போனும்ல.”

“முன்னாடி நிக்குற ஆளுக்கு நம்ம அவசரம் எங்க புரியத போகுது..”

“எஸ்.. எஸ்..” சொல்லி இருவரும் ஏதோ பேசியபடி டிக்கெட் எடுத்து அதை சரி பார்த்துவிட்டு ப்ளைட் ஏறினர்..

(அதன் பின் நடந்தது எல்லாம் ஏற்கெனவே சொல்லிவிட்டேன்)

தற்போது…

இவன் இருக்கும் நிலையை பார்த்துவிட்டு அவளே இவனுக்கு முன்னால் போய் நிற்க இவன் சுதாரித்து

“ஹலோ மித்ரா மீ பர்ஸ்ட் யூ நெக்ஸ்ட்” என சொல்ல இந்த முறை அவள் வாயை பிளந்து அவனை மேலும் கீழும் பார்த்தாள்..

“ஏய்.. டு யூ நோ மீ?” என ஆச்சரியமாக கேட்க

“நோ.. நோ.. ஐ டோன்ட் நோ..” என பொய் சொன்னான்.

“தென் ஹவ் டு யூ நோ மை நேம்..?”

“வாட்ஸ் யுவர் நேம்” என திரும்பி அவனே கேட்க

“ஹே கமான்.. டோன்ட் ப்ளே.”

“நோ.. நோ.. ஐயம் நாட் ப்ளேயிங்க.” என திரும்பி அவள் நம்பும் விதமாக சொன்னான்.

“பட் ஜெஸ்ட் நவ் யு ஆர் டெல்லிங் மை நேம்.. ஹவ் இட்ஸ் பாசிப்பில்” அவள் யோசிக்க வரிசை விட்டு இவர்கள் இருவரும் மட்டும் தான் விலகி நின்றுக் கொண்டிருந்தனர்..

அவன் சுதாரித்து இவளுக்கு முன்னால் நின்று டிக்கெட் எடுக்க இவளோ இது எப்படி சாத்தியம் என யோசித்துக் கொண்டே வரிசையில் நின்று டிக்கெட் எடுத்தாள்.. அவன் டிக்கெட் எடுத்துவிட்டு செக்கிங் எல்லாம் முடித்து ப்ளைட் ஏற செல்லும் சமயம் இவள் லக்கேஜ்ஜீடன் ஏற முடியாமல் தடுமாறுவாள் என தெரிந்ததால் ப்ளைட்டில் ஏறாமல் இவளுக்காக வெளியே காத்திருந்தான்.

சிறிது நேரம் கழித்து அவள் பெரிய சூட்கேஸ் மற்றும் ஒரு ஹேன்பேக்குடன் நடந்து வந்தாள். அந்த சூட்கேஸை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வந்தாள். இவன் நிற்பதை பார்த்ததும் ஒரு புன்னகை தந்து

“ஹேய் இன்னும் ப்ளைட் ஏறலையா?” கேட்க இவனுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. பின் சுதாரித்து,

“நீயும் கோவை தான.. அதான் உனக்காக வெயிட்டிங்” என்றான்.. அவளும் சிரித்துவிட்டு

“சரி சரி.. வா போலாம்.” என்று அந்த சூட்கேஸை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு ப்ளைட்டின் படி ஏற இவன் அந்த சூட்கேஸ் வாங்கி தூக்கி கொண்டு ஏறினான்..

உள்ளே போனதும் ஏர்கோஸ்ட்டிடம் டிக்கெட் குடுக்க அவள் சீட் நம்பர் பார்த்து சொல்ல அவன் தன் லக்கேஜ் வைத்து விட்டு உட்கார இந்த சூட்கேஸ் மட்டும் மேலே வைக்காமல் இருப்பதை பார்த்து ஏர்கோஸ்ட் கேட்க இவனோ

“திஸிஸ் நாட் மைன்.. இட்ஸ் கெர்செல்ப்” சொல்ல அவளும் வந்து சேர்ந்தாள்.. அவளும் டிக்கெட் காண்பிக்க என் சீட்டுக்கு பக்கத்தில் தான் அவளுடைய சீட். அதனால் அவளுடைய சூட்கேஸை தூக்கி வைத்தேன்.. ஏர்கோஸ்ட் திரும்பி செல்லும் போது இவள் மீது மோதி திரும்பி தடுமாறி விழ போக இந்த முறை…

திரும்ப திரும்ப சுழலும்…

473002cookie-checkதிரும்ப திரும்ப சுழலும் பாகம் 1

Dont Post any No. in Comments Section

Your email address will not be published. Required fields are marked *

LooooL