ஆதிகால பழக்கம் ஆனந்த சுகம்
நீண்ட காலத்திற்கு பிறகு விஞ்ஞான வளர்ச்சியின் உச்சமா பழைய பள்ளி கல்லூரி நண்பர்களோடு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்தேன். அதுவும் என்னோட நெருங்கிய தோழிகள் பலரும் பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் செட்டில் ஆகி இருந்தார்கள். அதே போல் தான் பள்ளி, கல்லூரி தோழர்களின். இப்போதைய அவர்களின் படங்களை, ஃபேஸ்புக், வாட்ஸ்அப்யில் பார்த்த போது என்னால் அவர்கள் தானா என்று நம்ப முடிய வில்லை. நானும் தான். பிள்ளை பெற்று ஆண் பெண் பேதம் இல்லாமல் தொப்பை போட்டு, …