மீண்டும் அவளோடு 1
டிசம்பர் 31, 2021. சென்னைக்கு புறநகரத்தில் உள்ள அந்த பழைய அபார்மெண்டில் புது வருடத்திற்கான கொண்டாட்டம் முந்தைய நாள் இரவிலிருந்தே ஆரம்பித்து கலை கட்டியிருந்தது. அந்த அபார்மெண்டில் இருந்த பூங்காவில் ஒரு மேடை அமைத்து அதில் ஆங்காங்கே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பெரும்பாலான நபர்கள் அவர்களின் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்.. அந்த பூங்காவில் இருந்த மரத்திற்கு பக்கத்தில் குடும்பம் குடும்பமாக இல்லை என்றால் கணவன் மனைவியாக சேர்ந்திருந்து இன்னும் சிறிது நேரத்தில் வர போகும் புத்தாண்டை வரவேற்க …