அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்தது தானே வாழ்க்கை
காலை 6 மணி. மரங்கள் சூழ்ந்து பறவைகளால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட பகுதி. மனதை மகிழ்விக்கும் பகுதி. அது நடை பயிற்சி செய்யும் இடம். நானும் மற்றவர்கள் போல் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தேன். ஆஹா அற்புதமான தென்றல் என்னை தீண்டிச்செல்கிறது. எனது ஆத்மாவை இந்த தென்றல் உடலை விட்டு வெளியே எடுத்து செல்கிறது. காற்றோடு காற்றாக கலந்த தருணம். ஆயிரம் கவலைகள் இருந்தாலும் இந்த காலை வேளையில் இப்படி நடப்பது இதயத்திற்கு இருதுவாக உள்ளது. ஆன்மாவை அமைதியாக்க …