என் மனம் குளிர்ந்தது
திருமணம் நடந்து கொண்டிருக்கின்றது. மணமகன் மேடையில் மிகவும் மகிழ்ச்சியாக உட்கார்ந்து இருந்தார். புரோகிதர் வேதங்கள் சொல்வதைக்கேட்டு அதற்கு என்ன அர்த்தம் என்றுகூட தெரியாமல் எரியும் நெருப்பில் வாயில் வருவதை சொல்லிக்கொண்டே நெருப்பில் எதையோ போட்டுக்கொண்டு இருந்தார். பாவம் அளவற்ற மகிழ்ச்சி எதைப்பற்றியும் யோசிக்கவிடாது. அதை அந்த மணமகனை பார்த்து தெரிந்து கொண்டேன். மணமகனை சுற்றி நின்றுக்கொண்டு இருந்த அவருடைய சிலர் சொந்தங்கள் முகத்தில் போலி புன்னகையோடு நின்றுக்கொண்டு இருந்தார்கள். மணமகனின் நண்பர்கள் நேற்று அடித்த போதை இறங்காமல் …