எல்லாம் அந்த ஒரு நாள், அந்த ஒரு நாளினால் Part 1
‘கவிதா எங்கமா டீயோட போற’ என்று அனந்தகிருஷ்ணன் கேட்க கவிதா கையில் டீ கோப்பையுடன் நின்று அவரிடம் ‘அது மாமா கார்த்திக்கு உடம்பு சரியில்லையாம், அதான் கொஞ்சம் சுக்கு மிளகு தட்டி டீயா போட்டுட்டு போறன், அவன்தான் கஷாயம்னாலே குடிக்க மாட்டேனே’ என்று சொல்லினாள். ‘ம்ம் அவன் இப்போ ஸ்கூல் முடிச்சு காலேஜ் போக போறான், நீ இன்னும் அவனை சின்ன பையன் மாதிரி நடத்துர’ என்று சலித்துக்கொள்ள, கவிதா ‘அதுனால என்ன மாமா அவன் எப்போதும் …