மீண்டும் அவளோடு 2
சென்ற பகுதியின் தொடர்ச்சி… கோமதி என்ற பெயரையும் கேட்டதும் என் மனதிற்குள் ஒருவிதமான சிலிர்ப்பு ஏற்பட்டு அடங்கியது. அதற்கு காரணம் அந்த பெயர் என் வாழ்க்கை பக்கங்களை ஒரு வினாடியில் பின்னோக்கி எடுத்து சென்றுவிட்டது. திருமணத்திற்கு முன்பான இளமை காலத்தில் எப்போதும் கோமதி மயமாக தான் இருந்தேன். திரிந்தேன்.. அந்த பெயர் மீது அவ்வளவு காதல்.. அந்த பெயரை மட்டும் காதலிக்கவில்லை.. அந்த பெயருக்கு சொந்தக்காரியையும் சேர்த்து காதலித்தேன்.. அந்த காதல் காலத்தால் கை கூடவில்லை என்றாலும் …