கோடை கொண்டாட்டம் – Part 1
இரயில் மயிலாடுதுறை ஸ்டேஷனை தாண்டி சென்று கொண்டிருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் தான் நம்ம ஊரு ஸ்டேஷன் வந்துடும் என்று அருணிடம் கூறினார் அவனது அப்பா குமார். மூன்று வருடம் கழித்து சொந்த ஊருக்கு வரும் ஆனந்தம் அவருக்கு. ஆனால் அருணுக்கோ மும்பை சிட்டியில் நன்றாக செட்டில் ஆகிவிட்டு கிராமத்திற்கு வருவதில் விருப்பம் இல்லை. மகனின் மனதை புரிந்து கொண்ட குமார். ஒரு மாதம் தான. கோடை விடுமுறைக்கு தான வரோம். கொஞ்சம் மாற்றமா இருக்கும்டா …